முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிரியர்களுக்கு ஊதியம் தர பணமில்லை: பாகிஸ்தானில் மூடப்படும் பள்ளிக்கூடங்கள்

செவ்வாய்க்கிழமை, 5 நவம்பர் 2024      உலகம்
Pak 2024-11-05

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாநிலத்தில் ஆசிரியர்களுக்கு சம்பளம் தர பணமில்லாததால் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன.

இது குறித்து அந்த மாநில கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது,

இங்கு 275 மனித வள மேம்பாடு தேசிய ஆணையம் பள்ளிகள், 541 ஆரம்ப பள்ளிகள், 2,200 பெண்கள் சமூக பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 8 மாதங்களாக ஊதியம் கிடைக்கவில்லை. 

இந்த ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.36 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் கொடுப்பது ரூ. 21 ஆயிரம் தான். அதுவும் தற்போது கொடுக்கப்படவில்லை.அரசிடம் இருந்து நிதி வராததால், ஆசிரியர்கள் ஊதியம் இல்லாமல் தவிக்கிறார்கள் என்றார்.

ஆசிரியர்கள் கூறுகையில், பல பள்ளிகளுக்கு சொந்தமான கட்டிடம் இல்லை. வாடகை கட்டிடத்தில் தான் இயங்குகிறது. தேவையான நிதி, அரசிடமிருந்து பள்ளி நிர்வாகத்திற்கு வராததால், வாடகை செலுத்த இயலவில்லை. 

முறையான ஊதியம் இல்லாததால் பல பள்ளிகள் இழுத்து மூடப்பட்டன. உடனடியாக நிலுவையில் உள்ள ஊதியம் அளிக்காவிட்டால் மேலும் பள்ளிகள் மூடப்படும் அபாயம் ஏற்படும். இதனால் மாணவர்களின் எதிர்கால கல்வி பாதிப்புக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஆசிரியர்கள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து