முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

98 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பி விட்டன : ரிசர்வ் வங்கி தகவல்

செவ்வாய்க்கிழமை, 5 நவம்பர் 2024      இந்தியா
RBI 2023-04-27

Source: provided

மும்பை : 98.04 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி இருப்பதாக ரிசர்வ் வங்கி தலைமை பொதுமேலாளர் புனீத் பஞ்சோலி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு மே மாதம் அறிவித்தது. இந்த நோட்டுகளை பொதுமக்கள் தங்கள் வங்கி கணக்கில் செலுத்தவோ, வங்கிகளில் மாற்றவோ செய்யலாம் என அறிவித்தது. 

இதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி வரை அவகாசமும் அளிக்கப்பட்டது. பின்னர் ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் மூலம் மாற்றிக்கொள்ளவும் பல்வேறு கட்டமாக அறிவிப்புகளை வழங்கியது. அத்துடன் வங்கிக்கு திரும்பிய 2,000 ரூபாய் நோட்டுகள் குறித்த விவரங்களை ரிசர்வ் வங்கி அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

அந்தவகையில் கடந்த 31-ம் தேதி வரை வங்கிக்கு திரும்பிய 2,000 ரூபாய் நோட்டு விவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது. அதன்படி மொத்தம் ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்த நிலையில், தற்போது ரூ.6,970 கோடி மதிப்பிலான நோட்டுகள் வங்கிக்கு திரும்பவில்லை என கூறப்பட்டு உள்ளது. 

இதன் மூலம் 98.04 சதவீத நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி இருப்பதாக ரிசர்வ் வங்கி தலைமை பொதுமேலாளர் புனீத் பஞ்சோலி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து