முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கமலா ஹாரிஸ் வெற்றிக்காக சொந்த ஊரில் சிறப்பு பூஜை

செவ்வாய்க்கிழமை, 5 நவம்பர் 2024      தமிழகம்      உலகம்
Kamala 2024 08 03

திருவாரூர், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற அவரின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள துளசேந்திரப்புரம்தானின் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள துளசேந்திரப்புரம்தான் கமலா ஹாரீஸின் சொந்த ஊராகும்.. இந்த கிராமத்தில் பிறந்த பி.வி.கோபால் ஐயர் - ராஜம் தம்பதியரின் மகள்கள் சியமளா, சரளா. பின்னர், அரசு வேலை கிடைத்ததையடுத்து கோபால் ஐயர் குடும்பத்துடன் பூர்வீக சொத்துக்களை விற்றுவிட்டு வெளியூர் சென்று விட்டார். தொடர்ந்து அவரது ரத்த சொந்தங்களும் துளசேந்திரபுரத்திலிருந்து பணி நிமித்தமாக வெளியேறிவிட்டனர்.

கோபால் ஐயர் சென்னையில் வசித்த போது, மகள் சியமளா அமெரிக்காவில் சட்டம் படிக்க சென்றார். அங்கு  உடன் படித்த டொனால்ட் என்பவரை  காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு கமலா, மாயா என இரு பெண் குழந்தைகள் பிறந்தன. இதற்கு இடையே, டொனால்டை சியமளா விவகாரத்து செய்தார். இதில், கமலா, தனது தாயார் சியமளா போல், அமெரிக்காவிற்கு சென்று கல்வி பயின்றதுடன் பொது வாழ்க்கையிலும் ஈடுபட்டு அரசியலில் நுழைந்தார்.

தற்போது , அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக உள்ள கமலா ஹாரிஸ், நேற்று நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு களத்தில் உள்ளார். இந்த நிலையில், கமலா ஹாரீஸ் வெற்றி பெற வேண்டி, துளசேந்திரபுரத்தில் உள்ள தாய் வழி குடும்ப குலதெய்வமான ஸ்ரீ தர்ம சாஸ்தா ஸ்ரீ சேவக பெருமாள் கோயிலில் நேற்று காலை சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து