முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடிக்காக நிறுத்தப்பட்ட ஹேமந்த் சோரனின் ஹெலிகாப்டர்: ஜனாதிபதியிடம் ஜே.எம்.எம். கட்சி புகார்

செவ்வாய்க்கிழமை, 5 நவம்பர் 2024      இந்தியா
Hemant-Soren 2024-11-05

ராஞ்சி, பிரதமர் நரேந்திர மோடியின் ஜார்க்கண்ட் வருகையின் போது பாதுகாப்பு காரணம் காட்டி, மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் ஹெலிகாப்டரை எடுக்க அனுமதி அளிக்காமல் தாமதம் செய்தது குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு ஜே.எம்.எம். செய்தித் தொடர்பாளர் சுப்ரியோ பட்டாச்சார்யா கடிதம் எழுதியுள்ளார். 

அந்த கடிதத்தில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நட்சத்திர பேச்சாளரும், மாநிலத்தின் முதல்வருமான ஹேமந்த் சோரன் நேற்று முன்தினம் மதியம் 1.45 மணிக்கு மேற்கு சிங்பூமில் உள்ள குத்ரியில் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற பிறகு, சிம்டேகாவில் உள்ள பஜார் தாண்டில் மதியம் 2.25 மணிக்கு தேர்தல் கூட்டத்தில் உரையாற்ற திட்டமிட்டிருந்தார். 

அதே நாளில் பா.ஜ.க.வின் நட்சத்திரப் பேச்சாளரும், பிரதமருமான மோடி, சாய்பாசா கல்லூரி மைதானத்தில் பிற்பகல் 2:40 மணிக்கு பிரச்சாரம் செய்தார். பிரதமர் பிரச்சாரம் செய்த சாய்பாசாவிலிருந்து ஹேமந்த் சோரன் பிரசாரம் செய்த குத்ரிக்கு 80 கி.மீ. தொலைவு, குத்ரியில் இருந்து சிம்டேகாவுக்கு 90 கி.மீ. தொலைவு உள்ளது. 

ஆனால், பிரதமரின் பாதுகாப்பு நெறிமுறையை மேற்கோள் காட்டி, ஒன்றரை மணிநேரம் ஹேமந்த சோரனின் ஹெலிகாப்டருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எங்கள் முதல்வர் பழங்குடியின சமூகத்திலிருந்து வந்தவர், பெரும் போராட்டத்திற்குப் பிறகு இந்த நிலையை அடைந்தார். 

நீங்களும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு நாட்டின் மிக உயர்ந்த பதவியை அடைந்தீர்கள் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் பாரபட்சமின்றி சமமான தேர்தல் களத்தை அனைத்துக் கட்சிகளுக்கும் உருவாக்குவதை ஜனதிபதி தலையிட்டு உறுதி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து