முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தல்: பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியீடு

வெள்ளிக்கிழமை, 6 செப்டம்பர் 2024      இந்தியா
BJP 2024-09-06

Source: provided

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,  மாநிலத்தில் பயங்கரவாதிகள் அழித்த கோயிலை மீண்டும் கட்டுவோம். மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 வது சட்டப்பிரிவு திரும்பாது '' எனக்கூறினார்.

90 சட்டசபை தொகுதிகளை கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. ஜம்முவில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அமித்ஷா கூறியதாவது: தேசியவாத காங்கிரசின் அஜெண்டாவை காங்கிரஸ் மறைமுகமாக ஆதரிக்கிறது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370 வது சட்டப்பிரிவு என்பது வரலாறு. அது மீண்டும் திரும்பாது. அதனை நடக்க விட மாட்டோம். இச்சட்டம் இளைஞர்களின் கைகளில் ஆயுதத்தையும் மற்றும் கற்களையும் கொடுத்தது. ஆண்டு தோறும், குடும்பத்தில் உள்ள முதிய பெண்களுக்கு ரூ.18 ஆயிரம் வழங்கப்படும்.உஜ்வாலா திட்டத்தின் கீழ் இரண்டு சிலிண்டர் வழங்கப்படும்.

மாணவர்களுக்கு ஆண்டுதோறும் போக்குவரத்து அலவன்சாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும், குஜ்ஜார்களுக்கான இட ஒதுக்கீட்டில் கையை வைக்க அனுமதிக்க மாட்டோம். கடந்த 10 ஆண்டுகளில் காஷ்மீரின் 10 ஆண்டுகால பொற்கால சகாப்தத்தில் அமைதி, வளர்ச்சி ஆகியவை உறுதி செய்யப்பட்டு உள்ளது. காஷ்மீரில் பயங்கரவாதம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படுவதை உறுதி செய்யப்படும். இந்த பிராந்தியத்தில் 5 ஆண்டு காலத்ஸதில் வளர்ச்சி ஏற்படுவதை உறுதி செய்வோம். 3 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம். மாநிலத்தில் பயங்கரவாதிகள் அழித்த கோயிலை மீண்டும் கட்டுவோம். மத்திய அரசு திட்டங்களின் பலன்கள் மாநில மக்களுக்கு கிடைக்க செய்வோம். சுற்றுலாவை வளர்க்க பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படும். இவ்வாறு அமித்ஷா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து