முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

100-வது ஆண்டில் ஹாக்கி இந்தியா ஆடவருக்கான லீக் போட்டி மீண்டும் தொடக்கம்

வியாழக்கிழமை, 7 நவம்பர் 2024      விளையாட்டு
7-Ram-53

Source: provided

புதுடெல்லி: ஹாக்கி இந்தியாவின் 100ஆவது ஆண்டினை முன்னிட்டு ஆடவருக்கான ஹாக்கி லீக் மீண்டும் தொடங்கப்படுகிறது.

99 வருடங்களில்... 

இந்தியாவின் ஹாக்கி விளையாட்டுக்கான தேசிய கூட்டமைப்பு நவ.7, 1925ஆம் ஆண்டு ஹாக்கி இந்தியா என்ற பெயரில் அமைக்கப்பட்டது. இந்த முக்கியமான நிகழ்வின்மூலம் ஹாக்கி இந்தியாவின் வெற்றிக்கும் புகழுக்கும் வித்திடப்பட்டது. இந்திய விளையாட்டுத் துறையில் கடந்த 99 வருடங்களில் ஈடுஇணையற்ற சாதனைகளை ஹாக்கி இந்தியா படைத்துள்ளது. இதுவரை ஒலிம்பிக்கில் 8 தங்கம், 8 வெள்ளிப் பதக்கங்களும், 4 வெண்கலப் பதக்கங்களும் வென்றுள்ளன.

ஒலிம்பிக் பதக்கம்... 

இயற்கையான ஆடுகளத்தில் இருந்து செயற்கையாக உருவாக்கப்பட்ட ஆடுகளத்தில்வரை ஹாக்கி இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஹாக்கி இந்தியா புத்துயிர்ப்பு அடைந்துள்ளது. ஹாக்கியில் ஆடவர் அணி கடந்த 52 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது. மகளிர் ஹாக்கி இந்தியா டோக்கியோ ஒலிம்பிக்கில் 4ஆவது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஹாக்கி லீக்...

ஹாக்கி இந்தியா லீக் மீண்டும் நடைபெறவிருக்கிறது. 2013இல் தொடக்கிய இந்த லீக் 2017 உடன் நடைபெறாமல் இருந்தது. தற்போது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இது மீண்டும் தொடங்கவிருப்பது மகிழ்ச்சியான செய்தி. பல சர்வதேச போட்டிகளை ஹாக்கி இந்தியா சிறப்பாக நடத்தியிருக்கிறது. உலக தரமான ஆடுகளத்தை இந்தியா முழுவதும் நிறுவியிருக்கிறது.

டிஜிட்டல் புதுமை...

ஆன்லைனில் வீரர்கள் குறித்த பதிவு முறை, தேசிய வீரர்கள் குறித்த தரவுகள், மெம்பர் யுனிட் போர்டல் என டிஜிட்டல் புதுமையை புகுத்தியுள்ளது. ஹாக்கி இந்தியா பாலின சமத்துவத்தை விரும்புகிறது. ஆடவருக்கு என்ன பரிசுத்தொகையோ அதேயளவு பெண்களுக்கும் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் துவக்கம்...

ஹாக்கி இந்தியாவின் தலைவர் திலீப் டர்கி கூறியதாவது: 100ஆவது ஆண்டின் தொடக்கத்தை முன்னிட்டு ஹாக்கி இந்தியா ஆடவருக்கான ஹாக்கி லீக்கினையும் மீண்டும் துவங்குகிறது. மேலும் பெண்களுக்கான ஹாக்கி லீக்கினையும் தொடங்குகிறது. இவ்வளவு நீண்ட மறக்கமுடியாத பயணத்தையும் தொடர்ச்சியான போராட்டங்கள் வழியாக உருவான லெகசியை (விருப்புரிமைக்கொடை) வெளிக்காட்டும் விதமாகவும் இந்த வெற்றிக் கொண்டாடப்படுகிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து