முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவத்துறை சார்ந்த குற்றச்சாட்டு: எடப்பாடிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் சவால்

வியாழக்கிழமை, 7 நவம்பர் 2024      தமிழகம்
Ma Subramani-2023-11-09

சென்னை, சுகாதாரத்துறை மீது குற்றச்சாட்டு கூறும் முன் நேருக்கு நேர் விவாதிக்க எடப்பாடி பழனிசாமி தயாரா? என்று  அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, 

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தேவையான மருத்துவர்கள் போதிய அளவில் உள்ளனர். 3 ஆண்டுகளில் மருத்துவத் துறையில் 18,460 நிரந்தரப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. தமிழகத்தில் 36 மருத்துவக் கல்லூரிகளிலும் தகுதி பெற்ற நிரந்தமான மருத்துவ முதலவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பாம்பு கடி, நாய் கடிக்கு சுகாதாரத்துறை மூலம் மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அரசு மருத்துவமனைகளில் போதிய அளவில் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு தமிழகத்தில்  8 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். 2,553 மருத்துவப் பணியிடங்களுக்கு, 23,917 பேர் விண்ணப்பித்துள்ளனர். மருத்துவப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு 2025 ஜனவரியில் நடைபெறும். 

அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுகாதாரத்துறை மீது குற்றச்சாட்டு கூறும் முன் நேருக்கு நேர் விவாதிக்க எடப்பாடி பழனிசாமி தயாரா? .சுகாதாரத்துறை மீது களங்கம் ஏற்படுத்த எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார். எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல எத்தனை பேர் வந்தாலும் அவர்களுடன் அமர்ந்து மருத்துவத்துறை தொடர்பாக விவாதிக்கத் தயார். இவ்வாறு அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதனிடையே 13 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவர்கள் நியமிக்கப்படவில்லை என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு  அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பதிலில், 

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எந்த அப்டேட்டும் இல்லாத தலைவராய் இருப்பது வருத்தமளிக்கிறது. அப்டேட் அரசியல்வாதி என நினைத்துக் கொண்டிருந்தவர்கள், காலாவதி அரசியல்வாதியாக மாறி உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து