முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. சரியாக இருப்பதால் நடிகர் விஜய் விமர்சிக்கவில்லை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

புதன்கிழமை, 6 நவம்பர் 2024      அரசியல்
Jayakumar 2023 04 15

சென்னை, அ.தி.மு.க. சரியாக இருப்பதால் நடிகர் விஜய் விமர்சிக்கவில்லை என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

சென்னையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது.,  தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றாமல் ஏமாற்றியதை மக்களிடையே எடுத்து சென்று பிரசாரம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல் தொடர்பாக இன்று எதுவும் கலந்து ஆலோசிக்கப்படவில்லை. 2026 சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்களுக்கு மேல் இருக்கிறது. தேர்தல் கூட்டணி குறித்து பொதுச் செயலாளர் முடிவு செய்வார். அதனை முடிவு செய்ய வேண்டிய நேரம் இது அல்ல.

ஒரு ஆட்சி சரியில்லை, கட்சி சரியில்லை என்றால்தான் விமர்சனம் வரும்; அ.தி.மு.க. சரியாக இருப்பதால் தவெக தலைவர் விஜய் எங்களை (அ.தி.மு.க.) விமர்சிக்கவில்லை. எங்களைப் பற்றி பேசவில்லை என்றால் ஒரு சிறப்பான ஆட்சி 31 ஆண்டு காலம் கொடுத்திருக்கிறோம். ஆகவே விமர்சிக்க வேண்டிய தேவையே ஏற்படவில்லை. 2026 ஆண்டு மக்கள் விரும்புகின்ற ஆட்சியைக் கொடுக்க வருகிறோம். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தற்போது கட்சி சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் மாறி மாறி பாராட்டி கொள்கிறார்கள். ஒன்று அப்பா மகனை பாராட்டுவார்; அல்லது மகன் அப்பாவை பாராட்டுவார். இதுதான் இப்பொழுது தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. திமுகவின் மக்கள் விரோத, ஜனநாயக விரோத போக்கை மக்களிடம் கொண்டு செல்வோம். விலைவாசியை கட்டுப்படுத்த, மக்கள் திட்டங்களில் அரசு கவனம் செலுத்துவதில்லை; அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை திமுக அரசு முடக்கியும், ஸ்டிக்கரும் ஒட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து