முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை விமான நிலையத்தில் அக்டோபர் மாதம் முதல் 24 மணி நேர சேவை

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2024      தமிழகம்
Madurai-Airport 2024-09-11

Source: provided

மதுரை : மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்பட இந்திய விமான நிலையங்கள் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி வரும் அக்டோபர் முதல் இரவு நேரங்களில் விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூர், ஹைதராபாத் நகரங்களுக்கும், இலங்கை, சிங்கப்பூர், துபாய், மலேசியா ஆகிய வெளி நாடுகளுக்கும் விமான சேவைகள் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 14 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மதுரை விமான நிலையத்தை பயன்படுத்துகின்றனர். மதுரை விமான நிலையத்தைப் பொறுத்தவரை, காலை 6.55 மணிக்கு முதல் விமானம் மற்றும் இரவு 9.25-க்கு கடைசி விமானம் இயக்கப்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் விமானங்கள் இயக்கப்படாது.

மேலும் மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்படததன் காரணமாக, நேரடியாக பிற நாடுகளுக்கு பயணிக்க முடியாத சூழல் உள்ளது. சர்வதேச விமான நிலையமாக மாற்ற ஓடு பாதையை விரிவாக்கம் செய்ய வேண்டிய அவசியமாக உள்ளது.

இந்த நிலையில், மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம் மோகன் நாயுடுவை கடந்த ஜூலை மாதம் தமிழகத்தின் தென்மாவட்ட எம்.பி.க்கள் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது மதுரை விமான நிலையத்தை சர்வதேச நிலையமாக அறிவிக்கவும், இரவு நேரம் விமானத்தை இயக்கவும் கோரிக்கை வைத்தனர். மேலும் மதுரை வர்த்தக சங்கத்தினரும் இதே கோரிக்கையை இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவர் சுரேஷை நேரில் சந்தித்து முன் வைத்தனர்.

இந்த நிலையில், மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்பட இந்திய விமான நிலையங்கள் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி வரும் அக்டோபர் முதல் இரவு நேரங்களில் விமானங்கள் இயக்கப்படும்.  இதனை தொடர்ந்து இரவு நேரத்தில் விமானங்களை இயக்குவதற்கு விமான நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் மதுரை விமான நிலையம் செயல்படும் என்பதால் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கை ஏற்படுத்தப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து