முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விண்வெளியில் வரும் 19-ம் தேதி 2-வது முறை பிறந்தநாளை கொண்டாடுகிறார் சுனிதா

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2024      உலகம்
Sunita-Williams 2024-05-02

Source: provided

வாஷிங்டன் : விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இரண்டாவது முறையாக விண்வெளியில் தனது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார்.

அமெரிக்காவின் தனியார் நிறுவனமான போயிங் உருவாக்கியுள்ள ஸ்டார்லைனர் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஜூன் 5 ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர். ஜூன் 14 ஆம் தேதி அவர்கள் திரும்பவிருந்த நிலையில், ஸ்டார்லைனர் விண்கலனில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருவரும் அங்கேயே இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில்தான் அவர்கள் பூமிக்குத் திரும்புவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ் செப்டம்பர் 19 ஆம் தேதி தன் 59 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இது விண்வெளியில் அவர் கொண்டாடும் இரண்டாவது பிறந்தநாள் ஆகும். முன்னதாக கடந்த 2012 ஜூலை முதல் நவம்பர் வரை அவர் விண்வெளியில் இருந்தபோது தன்னுடைய பிறந்தநாளை முதல்முறையாக அங்கு கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. சுனிதா வில்லியம்ஸ் 1965, செப்டம்பர் 19 ஆம் தேதி பிறந்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். முதல்முறையாக 2006-2007ல் விண்வெளிக்குச் சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து