முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் மீண்டும் உற்பத்தியை தொடங்குகிறது போர்டு நிறுவனம்

வெள்ளிக்கிழமை, 13 செப்டம்பர் 2024      தமிழகம்
CM-2 2024-09-13

சென்னை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் மீண்டும் உற்பத்தியை தொடங்குவதாக ஃபோர்டு கார் நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, அமெரிக்காவுக்கு கடந்த 27-ஆம் தேதி பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் 17 நாள்களாக சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களில் உள்ள தொழில் முதலீட்டாளர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டார்.

இந்த பேச்சுவார்த்தை மூலம், 18 முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் ரூ. 7,616 கோடி முதலீடுகளை செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.  சென்னை அருகே மூடப்பட்ட முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவன அதிகாரிகளை சந்தித்து மீண்டும் உற்பத்தியை தொடங்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த நிலையில், தமிழகத்தில் மீண்டும் உற்பத்தியை தொடங்குவதாக ஃபோர்டு நிறுவனம் வெள்ளிக்கிழமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஃபோர்டு நிறுவனத்தின் நிர்வாகி கே ஹார்ட் வெளியிட்ட செய்தியில், சென்னையில் மீண்டும் உற்பத்தியை தொடங்குவதற்கு அனுமதிகோரி மாநில அரசுக்கு கடிதம் வழங்கியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார். இந்த நிறுவனம் மீண்டும் உற்பத்தியை தொடங்கினால், தமிழகத்தில் 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து