முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போராட்டத்தை தூண்டியதாக பாக். முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

ஞாயிற்றுக்கிழமை, 15 செப்டம்பர் 2024      உலகம்
Imran-Khan 2023-10-27

Source: provided

இஸ்லாமாபாத் : அரசாங்க அதிகாரிகளை கலகத்திற்கு தூண்டியதற்காகவும், தேசத்துரோக செயலில் ஈடுபட்டதற்காகவும் இம்ரான்கான் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது தோஷ்கானா வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவருடைய ஆட்சி கவிழ்க்கப்பட்டு பாகிஸ்தான் கோர்ட்டு அவரை சிறையில் அடைத்தது. மேலும் அவர் நிறுவிய பாகிஸ்தான் தெரிக்-இ-இன்சாப் கட்சிக்கு நாடு தழுவிய தடை விதிக்கப்பட்டது.

சிறையில் உள்ள இம்ரான்கானை விடுவிக்க வலியுறுத்தி தலைநகர் இஸ்லாமாபாத் உள்பட நாட்டின் முக்கிய நகரங்கள் முழுவதும் அவருடைய ஆதரவாளர்கள் திரண்டு வந்து போராட்டம் நடத்தினர். சிலநாட்களுக்கு முன்னர் நடந்த இந்த போராட்டம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. போராட்டத்தில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தனது சமூக ஊடகப் பதிவுகள் மூலம் அரசாங்க அதிகாரிகளை கலகத்திற்கு தூண்டியதற்காகவும், தேசத்துரோக செயலில் ஈடுபட்டதற்காகவும் இம்ரான்கான் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து