முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுவையில் மின்கட்டண உயர்வை கண்டித்து இன்று உண்ணாவிரதம் : வி.சி.க.வுக்கு அ.தி.மு.க. நேரில் அழைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 15 செப்டம்பர் 2024      இந்தியா
ADMK 2024-09-15

Source: provided

புதுச்சேரி : மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் இன்று 16-ம் தேதி நடக்கும் உண்ணாவிரத்தில் பங்கேற்க வி.சி.க. அலுவலகத்துக்கு நேரில் சென்று அ.தி.மு.க. அழைப்பு விடுத்துள்ளது. 

உளுந்தூர்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மது ஒழிப்பு மாநாட்டை அக்டோபர் 2-ம் தேதி நடத்துகிறது. மாநாட்டில்  பங்கேற்க அ.தி.மு.க.வுக்கு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.  

இந்நிலையில் புதுச்சேரியில் மின்கட்டண உயர்வை எதிர்த்து இன்று அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரதம் நடக்கிறது. இந்த உண்ணாவிரத்ததில் பங்கேற்க வருமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அ.தி.மு.க. அழைப்பு விடுத்துள்ளது.  

அ.தி.மு.க. மாநிலச்செயலர் அன்பழகன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அலுவலகத்துக்கு நேற்று நேரில் சென்று அங்கு கட்சியின் முதன்மைச் செயலர் தேவபொழிலனை சந்தித்து அழைப்பு விடுத்தார். இப்போராட்டத்தில் வி.சி.க. பங்கேற்பது பற்றி கட்சி மேலிடத்தில் கேட்டு புதுச்சேரி வி.சி.க. தரப்பு முடிவு எடுக்கவுள்ளதாக தெரிகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து