முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஞாயிற்றுக்கிழமை, 15 செப்டம்பர் 2024      தமிழகம்
Kurdalam 2023 06 20

Source: provided

தென்காசி : தொடர் விடுறையையொட்டி குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். இதனால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குற்றாலத்தில் அலைமோதியது. 

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த சாரல் மழையினால் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. குளிர்ந்த காற்று வேகமாக வீசி குளுமையான சூழல் நிலவுவதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில், தொடர் விடுறையையொட்டி குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். நேற்று ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், கேரளாவில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து அருவிகளில் உற்சாகமாக குளித்தனர். 

சபரிமலை நடை திறக்கப்பட்டதையொட்டி, அய்யப்ப பக்தர்களும் ஏராளமானோர் குற்றாலத்துக்கு வந்து அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். இதனால் மெயின் அருவி, புலியருவி, ஐந்தருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து