முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாங்கள் ஆட்சிக்கு வந்த ஒரு மணி நேரத்தில் பீகாரில் மதுவிலக்கு ரத்து: பிரசாந்த் கிஷோர் வாக்குறுதி

ஞாயிற்றுக்கிழமை, 15 செப்டம்பர் 2024      இந்தியா
Prashant-Kishore 2024 05 21

Source: provided

பாட்னா : பீகாரில் தனது ஜன் சூராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் அடுத்த ஒரு மணி நேரத்தில் நடைமுறையில் உள்ள மதுவிலக்கு ரத்து செய்யப்படும் என்று தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

 அக்டோபர் 2-ம் தேதி தான் தொடங்க இருக்கும் ஜன் சூராஜ் கட்சி குறித்து செய்தியாளர்களிடம் பிரசாந்த் கிஷோர்  கூறியதாவது: 

அக்டோபர் 2-ம் தேதிக்கு எந்த சிறப்பு திட்டமும் இல்லை. கடந்த இரண்டு வருடங்களாக நாங்கள் தயாராகி வருகிறோம். பீகாரில் அடுத்து ஜன் சூராஜ் ஆட்சி வந்தால் அடுத்த ஒரு மணி நேரத்தில் மதுவிலக்கை ரத்து செய்வோம். 

அதனால் பெண்களின் வாக்கு வங்கியை நான் இழந்தாலும் கவலை இல்லை. நான் தொடர்ந்து மதுவிலக்கை தடை செய்வதைப் பற்றிப் பேசிக்கொண்டே இருப்பேன். அது பீகாரின் நலனுக்கு நல்லதில்லை. மதுவிலக்கு என்பது நிதிஷ் குமாரின் போலி நடவடிக்கையேத் தவிர வேறொன்றும் இல்லை.

தற்போதைய மதுவிலக்கு பயனற்றது. அது மது வகைகளை வீட்டுக்கே வந்து விநியோகிக்க வழிவகுக்கிறது. இதனால் மாநிலத்துக்கு ரூ. 20,000 கோடி கலால் வரி மாநிலத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அக்டோபர் 2-ம் தேதி துவங்கப்பட உள்ள ஜன் சூராஜ் கட்சி அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து