முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாதுகாப்பை மீறி கர்நாடக முதல்வரை நெருங்கியவர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 15 செப்டம்பர் 2024      இந்தியா
Siddaramaiah 2023 04 16

Source: provided

பெங்களூரு : பாதுகாப்பை மீறி  கர்நாடக முதல்வர் சித்தராமையாவை நெருங்கிய நபரால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். இந்நிலையில் பெங்களூர் விதான சவுதா (கர்நாடகா சட்டசபை கட்டடம்) முன்பு நேற்று ஜனநாயக தினம் கொண்டாட்டம் நடந்தது. இதற்கான நிகழ்ச்சியில் முதல்வர் சித்தராமையா, அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மகாதேவப்பா மேடையில் பேசி கொண்டிருந்தார். அப்போது சித்தராமையா மேடையில் போடப்பட்டு இருந்த இருக்கையில் அமர்ந்து இருந்தார். இந்த வேளையில் திடீரென்று மேடை முன்பு அமர்ந்திருந்த பார்வையாளர்கள் கூட்டத்தில் இருந்து நபர் ஒருவர் ஆக்ரோஷமாக மேடையை நோக்கி ஓடினார். மேடை அருகே சென்றதும் ஜம்ப் செய்து சித்தராமையாவை நோக்கி ஓட முயன்றார்.

இதை கவனித்த பாதுகாவலர்கள் உடனடியாக அந்த இளைஞரை தடுத்தனர். இதனால் அவர் மேடையில் விழுந்தார். அதன்பிறகு அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை குண்டுகட்டாக இழுத்து சென்று போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். மேடையில் பாதுகாப்பை மீறி கர்நாடகா முதல்-மந்திரியை நோக்கி ஓடிய நபரால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இருப்பினும் கூட நிகழ்ச்சி தடைப்படவில்லை. நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து வந்தது.

முதற்கட்ட விசாரணையில், அவர் மகாதேவ் நாயக் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். சித்தராமையாவின் தீவிர ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. முதல்வருக்கு சால்வை அணிவிக்கும் முயற்சியில் அவரை அணுகியதாக தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும், பாதுகாப்பு நெறிமுறைகளை மீறியதற்காக அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், முதல்வர் சித்தராமையாவுக்கு சால்வை அணிவிக்க முயன்ற மகாதேவ் நாயக் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து