முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துலீப் கோப்பை டெஸ்ட் தொடர்: இந்தியா ஏ அணி வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 15 செப்டம்பர் 2024      விளையாட்டு
INDIA-C 2024-09-13

Source: provided

பெங்களூரு : துலீப் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்தியா ஏ அணி வெற்றி பெற்றது.

இரண்டாம் கட்ட... 

இந்தியாவில் உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரான துலீப் கோப்பை இரண்டாம் கட்ட போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா ஏ மற்றும் இந்தியா டி அணிகள் மோதின. போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா ஏ அணி 290 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து வந்த இந்தியா டி அணி 183 ரன்களுக்கு சுருண்டது.

புய் 113 ரன்கள்... 

இதைத் தொடர்ந்து 2 ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா ஏ அணி 380 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது. இதைத் தொடர்ந்து 487 எனும் கடின இலக்கை துரத்திய இந்தியா டி அணி துவக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்தியா டி அணிக்கு ரிக்கி புய் 113 ரன்களையும், அதன்பிறகு களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் தன் பங்கிற்கு 41 ரன்களையும், சஞ்சு சாம்சன் 40 ரன்களையும் எடுத்தனர். அதன் பிறகு களமிறங்கியவர்களில் சௌரப் குமார் 22 ரன்களையும், ஹர்ஷித் ராணா 24 ரன்களையும் எடுத்தனர். இந்தியா ஏ அணிக்கு பந்துவீச்சில் மிரட்டிய தனுஷ் கொடியன் 4 விக்கெட்டுகளையும், ஷாம்ஸ் முலானி 3 விக்கெட்டுகளையும், கலீல் அகமது மற்றும் ரியான் பராக் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து