முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணிப்பேட்டையில் ரூ.9 ஆயிரம் கோடியிலான கார் உற்பத்தி ஆலைக்கு செப். 28-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2024      தமிழகம்
CM 2024-05-31

சென்னை, ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் அமைய உள்ள ஜாகுவார், லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு வருகிற 28-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளார். 

ஜாகுவார், லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலை பனப்பாக்கத்தில் 400 ஏக்கரில் ரூ.9,000 கோடி மதிப்பீட்டில் டாடா மோட்டார்ஸ் அமைக்க உள்ளது. கார் உற்பத்தி ஆலையின் மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதைபோல பனப்பாக்கத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் ரூ.400 கோடி மதிப்பில் அமைய உள்ள மெகா காலணி உற்பத்தி ஆலைக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். இந்த மெகா காலணி உற்பத்தி பூங்காவின் மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தோல் மற்றும் காலணி உற்பத்தி சிறந்து விளங்குகிறது. அதை சர்வதேச தரத்தில் உயர்த்தி அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் இந்த மெகா காலணி உற்பத்தி ஆலை அமைக்கப்பட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து