முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியின் அடுத்த முதல்வர் யார்? இன்று அறிவிக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2024      இந்தியா
Kejriwal 2024-03-10

புதுடெல்லி, டெல்லி முன்னாள் துணை முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மணீஷ் சிசோடியா, நேற்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து ஆலோசனை நடத்திய நிலையில் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகிறது. இதில் சுனிதா கெஜ்ரிவால் உள்ளிட்ட 4 பேர் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டதாக தெரிகிறது.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கடந்த மார்ச் 21-ம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். பல்வேறு திருப்பங்களுக்கு பிறகு கடந்த 13-ம் தேதி அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். எனினும் முதல்வர் அலுவலகத்துக்கு செல்லக்கூடாது. ஆளுநரின் ஒப்புதல் இன்றி கோப்புகளில் கையெழுத்திடக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட் நிபந்தனை விதித்துள்ளது.

சிறையில் இருந்து விடுதலையான பிறகு டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி அலுவலகத்துக்கு கெஜ்ரிவால் நேற்று முன்தினம் சென்றார். அங்கு கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், “அடுத்த 2 நாட்களில் டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன். ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் புதிய முதல்வரை தேர்வு செய்வார்கள். நான் நேர்மையற்றவன், ஊழல்வாதி என்று பாஜக குற்றம் சாட்டுகிறது. எனவே அடுத்த சட்டப்பேரவைத் தேர்தல் வரை நான் முதல்வர் பதவியில் அமர மாட்டேன்.

டெல்லியின் ஒவ்வொரு தெரு, ஒவ்வொரு வீட்டுக்கும் செல்வேன். மக்கள் எனக்கு வாக்களித்து மீண்டும் முதல்வராக்கிய பிறகே முதல்வர் இருக்கையில் அமர்வேன். ஆம் ஆத்மியை உடைக்க பாஜக முயற்சி செய்கிறது. பொய் வழக்குகளை பதிவு செய்து எங்கள் கட்சி தலைவர்கள் சிறையில் தள்ளப்படுகின்றனர். துணைநிலை ஆளுநருக்கு கடிதம் எழுதக்கூடாது என்று மிரட்டினர். எனது குடும்பத்தினரை சந்திக்கக்கூடாது என்று மிரட்டினர்  என தெரிவித்தார்.

இந்நிலையில் டெல்லியின் அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பது குறித்து முதல்வர் கெஜ்ரிவாலுடன், ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மணீஷ் சிசோடியா சந்தித்து பேசினார். இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி முக்கிய நிர்வாகிகள் தெரிவிக்கையில்., “கெஜ்ரிவால் மற்றும் சிசோடியா நேற்று சந்தித்துப் பேசினர். முதல்வர் பதவியில் இருந்து விலகப் போவதாக கெஜ்ரிவால் அறிவித்த பிறகு நடக்கும் முதல் சந்திப்பு இது. இந்த சந்திப்பின்போது, டெல்லியின் அடுத்த முதல்வர் குறித்து இருவரும் விவாதித்ததாக தெரிவித்துள்ளனர். டெல்லி சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள முதல்வரின் அதிகாரபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. டெல்லியின் அடுத்த முதல்வராக சுனிதா கெஜ்ரிவால், டெல்லி அமைச்சர்கள் அதிஷி, கோபால் ராய், கைலாஷ் கெலாட் ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என ஊகங்கள் வெளியாகி உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து