முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிபா வைரசால் இளைஞர் பலி: பொது மக்கள் விழிப்புடன் இருக்க கேரள சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2024      இந்தியா
Nipah-virus 2024-03-10

திருவனந்தபுரம், கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் நிபா வைரசால் உயிரிழந்ததை அடுத்து, பரவாமல் தடுக்க மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் பொது மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அம்மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர், பெங்களூருவில் படித்து வந்தார். அண்மையில் அவர் தமது சொந்த ஊருக்கு திரும்பி இருக்கிறார். அடுத்த சில நாட்களில் தொடர்ந்து காய்ச்சல் இருக்கவே உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் இளைஞர் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென உயிரிழந்தார். அவரின் ரத்த மாதிரிகளை சோதனை செய்தபோது நிபா வைரசால் பலியானது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், நிபா வைரஸ் பரவலை தடுக்க களம் இறங்கும்படி சுகாதாரத்துறையினருக்கு உத்தரவிட்டு உள்ளார்.

இதையடுத்து கேரளாவில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது., நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, வைரஸ் பரவல் தடுக்க நேற்று முதல் (செப்.,16) பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடிகள் மற்றும் திரையரங்குகள் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.  பொதுக்கூட்டங்களும் நடத்த தடை விதிக்கப்பட்டது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட வேண்டும்.

பொதுமக்கள் முகமூடி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். தற்போது கவலைப்பட ஒன்றுமில்லை. தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார். தற்போது 3 பேர் நிபா வைரஸ் அறிகுறிகளால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்ட திருவாலி ஊராட்சியில் காய்ச்சல் கணக்கெடுப்பு பணியையும் சுகாதாரத் துறையினர் நடத்தி வருகின்றனர். இதற்கு, அங்கன்வாடி பணியாளர்கள் அடங்கிய 16 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து