முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓணம் பண்டிகை எதிரொலி: கேரளாவில் ஒரு நாளில் மட்டும்: ரூ.124 கோடிக்கு மது விற்பனை

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2024      இந்தியா
Mathu 2023 04 15

திருவனந்தபுரம், ஓணம் பண்டிகை எதிரொலியாக கேரளாவில் ரூ.124 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

கேரள மாநிலத்தில் புத்தாண்டு மற்றும் ஓணம் பண்டிகையின் போது மது விற்பனை எப்போதும் அதிகளவில் இருக்கும். இந்த ஆண்டு நேற்று முன்தினம் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. வயநாடு நிலச்சரிவு உயிர்ப்பலி காரணமாக அரசு சார்பில் ஓணம் கொண்டாட்டம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் கேரள மக்கள் ஓணம் பண்டிகைக்கு கடந்த சில நாட்களாக தயாராகி வந்தனர்.

எனவே வழக்கம் போல் மது விற்பனையும் அதிகமாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு மாநிலத்தில் பார்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. ஆனால் உத்ராடம் வரையிலான 9 நாட்களில் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது மது விற்பனை குறைந்தே உள்ளது.கடந்த ஆண்டு இந்த கால கட்டத்தில் ரூ.715 கோடிக்கு மது விற்பனையானது. ஆனால் தற்போது ரூ.701 கோடிக்கு தான் விற்பனை நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டை விட ரூ.14 கோடி குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரம் ஓணம் நாளில் மட்டும் ரூ.124 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.4 கோடி அதிகமாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து