முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விடுதி அறையில் மாட்டிறைச்சி சமையல்: 7 கல்லூரி மாணவர்கள் வெளியேற்றம்

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2024      தமிழகம்
7-college-students 2024-03-

பெர்ஹாம்பூர், ஒடிசா மாநிலம் பெர்ஹாம்பூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பொறியியல் கல்லூரி ஒன்றின் விடுதியில் மாட்டிறைச்சி சமைத்த 7 மாணவர்கள் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக அவர்கள் வெளியேற்றப்பட்டதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த புதன்கிழமை அன்று பரலா மகாராஜா பொறியியல் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த 7 மாணவர்கள் தங்கள் அறையில் மாட்டிறைச்சி சமைத்துள்ளனர். இது தொடர்பாக விடுதியில் தங்கியிருந்த பிற மாணவர்கள் கல்லூரி முதல்வரிடம் புகாரளித்துள்ளனர். இதையடுத்து மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், கல்லூரியின் நடத்தை விதிகளை மீறியதற்காக அவர்கள் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்களில் ஒரு மாணவருக்கு மட்டும் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

அந்த மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பஜ்ரங் தளம் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கல்லூரி வளாகம் மற்றும் விடுதிகள் அருகே அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து