முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் கெஜ்ரிவால்

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2024      இந்தியா
Kejriwal 2023 04 16

Source: provided

புதுடெல்லி : டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவை, இன்று மாலை 4.30 மணியளவில் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பின்போது தனது முதல்வர் பதவி விலகுவார் எனத் தெரிகிறது.

இதற்கு முன்பு, அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில், இன்று காலை 11.30 மணியளவில் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் ஆம் ஆத்மியின் அரசியல் விவகாரக் குழுவும் பங்கேற்கிறது. இந்தக் கூட்டத்தில் டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலோசனைக்குப் பிறகு மாலையில் கவர்னரை கெஜ்ரிவால் சந்திக்கவுள்ளார்.

டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று (செப். 16) அறிவித்திருந்தார். கட்சியின் மூத்த தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், கலந்தாலோசித்து, இரு தினங்களுக்குள் புதிய முதல்வர் யார் என்பது குறித்து அறிவிக்கப்படும் எனவும் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.  இதனிடையே, துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவை சந்திக்க அரவிந்த் கெஜ்ரிவால் அனுமதி கோரியிருந்தார். இந்நிலையில் இன்று மாலை 4.30 மணிக்கு கேஜரிவாலை சந்திக்க நேரம் ஒதுக்கியுள்ளதாக ஆளுநர் மாளிகை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து