முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: தென் கொரியா அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2024      விளையாட்டு
Hockey 2024-03-10

Source: provided

ஹூலுன்பியர் : ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் தோல்வியே பெறாமல் அரையிறுதியில் தென் கொரியா அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. 

4 அணிகள் தகுதி...

6 அணிகள் இடையிலான 8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சீனாவின் ஹூலுன்பியர் நகரில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் இந்தியா (15 புள்ளி), பாகிஸ்தான் (8), சீனா (6), தென்கொரியா (6) ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, தென் கொரியாவுடன் நேற்று மோதியது. லீக் சுற்றில் ஏற்கனவே தென் கொரியாவை வீழ்த்திய உத்வேகத்துடன் களமிறங்கிய இந்திய அணி இதிலும் ஆதிக்கம் செலுத்தியது.

4-1 என்ற கணக்கில்...

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்தியா தரப்பில் ஹர்மன்பிரீத் சிங் 2 கோல்களும், உத்தம் சிங் மற்றும் ஜர்மன்பிரீத் சிங் தலா 1 கோல் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.  மற்றொரு அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் - சீன அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் சீனாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இந்த வெற்றி மூலம் இறுதிப்போட்டியில் இந்தியா - சீன அணிகள் மோதவுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து