முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக நாம் முன்னேறிச்செல்ல வேண்டும்: ஜனாதிபதி திரெளபதி முர்மு வேண்டுகோள்

வியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2024      இந்தியா
Murmu-2024-09-19

இந்தூர், தூய்மை மட்டுமே இந்தியாவை ஆரோக்கியமான வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் என்று தெரிவித்துள்ள ஜனாதிபி திரௌபதி முர்மு, இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாற மக்கள் முன்னேறிச் செல்ல வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உஜ்ஜையினில் நடைபெற்ற சஃபாய் மித்ரா சம்மேளனத்தில் உரையாற்றிய முர்மு, மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரம் தொடர்ந்து ஏழாவது முறையாகத் தூய்மைக் கணக்கெடுப்பில் முதலிடத்தில் உள்ளதாகவும், போபால் நாட்டிலேயே தூய்மையான மாநிலத் தலைநகராக திகழ்கிறது என்றும் பாராட்டினார்.

சஃபாய் மித்ராக்களை (துப்புரவுத் தொழிலாளர்கள்) கௌரவிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. தூய்மை மட்டுமே நாட்டை ஆரோக்கியமான, வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும். துப்புரவுத் தொழிலாளிகளைக் கௌரவிப்பதன் மூலம் நாமே போற்றிக் கொள்கிறோம் என்று அவர் கூறினார். இந்தியா சுத்தம், ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியடைந்த நாடாக மாற மக்கள் ஒருபடி முன்னேறிச் செல்லுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார். 

கடந்த 10 ஆண்டுகளில் "ஸ்வச் பாரத் மிஷன்" நாடு தழுவிய இயக்கமாக மாறியுள்ளது. இதன் விளைவாக நாட்டில் விரிவான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.  இந்த பேரணி மக்களிடையே தூய்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. மேலும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு கழிப்பறை வசதி செய்து கொடுத்ததற்காக அரசுக்கு அவர் பாராட்டுகளைத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், நான்கு பெண்கள் உள்பட ஐந்து துப்புரவுத் தொழிலாளர்களை ஜனாதிபதி திரெளபதி முர்மு பாராட்டி பரிசுகளை வழங்கினார். மேலும் ரூ.1,692 கோடி செலவில் கட்டப்படவுள்ள உஜ்ஜைன்-இந்தூர் ஆறு வழிச் சாலைக்கு அடிக்கல் நாட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து