முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புகழ்பெற்ற ஆன்மிக எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன் காலமானார்

ஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2024      தமிழகம்
Indira-Soundarrajan 2024-11

Source: provided

மதுரை : பிரபல புகழ்பெற்ற ஆன்மிக எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன்(65) நேற்று காலமானார். மதுரை டி.வி.எஸ். நகரில் உள்ள அவரது வீட்டில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது.

தமிழ் எழுத்தாளரான இந்திரா சவுந்தர்ராஜன், பொதுவாசிப்புக்குரிய நாவல்களை எழுதியவர். நாவல்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், ஆன்மிக சொற்பொழிவு போன்ற பல துறைகள் மூலம் புகழ்பெற்றவர். 

தென்னிந்திய மரபுகள் மற்றும் புராணக் கதைகளின் அடிப்படையில் வரலாறு, சமூகம், ஆன்மிகம், மர்மங்கள், சித்தர்கள் பற்றிய நூல்களை எழுதியவர். அவர் அமானுஷ்யம், மறுபிறவி போன்றவற்றை உள்ளடக்கி ஏராளமான நாவல்கள், சிறுகதைகளை எழுதியுள்ளார். 

இந்திரா சவுந்தர்ராஜனின் படைப்புகளான என் பெயர் ரங்கநாயகி, மர்ம தேசம் உள்ளிட்ட படைப்புகள் தொலைக்காட்சி தொடர்களாகவும், திரைப்படங்களாகவும் வந்துள்ளன. இந்து மதம், புராண இதிகாசங்கள் கலந்து எழுதுவதில் இந்திரா சவுந்தர்ராஜன் வல்லவர்.

சிருங்காரம், அனந்தபுரத்து வீடு ஆகிய படங்களுக்கு திரைக்கதையும் அவர் எழுதி உள்ளார். இவரது நூலான கிருஷ்ண தாசி , கால பைரவ ரகசியம் போன்ற படைப்புகள் இந்தி மொழியில் தொலைக்காட்சித் தொடர்களாக வெளிவந்துள்ளன. 

இந்திரா சவுந்தர்ராஜன் எழுதிய என் பெயர் ரெங்கநாயகி என்னும் படைப்பு தமிழ் வளர்ச்சித்துறையின் 1999-ம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான மூன்றாம் பரிசினை பெற்றது. சிருங்காரம் என்ற திரைப்படம் 2007- க்கான தேசிய விருது, மைலாப்பூர் அகாடமி விருது, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா விருது மற்றும் தமிழ்ச்சங்கம் விருதுகளைப் பெற்றது.

ருத்ரம் தொலைக்காட்சி தொடருக்காக தமிழக அரசின் விருது பெற்றார். இலக்கிய சிந்தனை அமைப்பின் சிறந்த சிறுகதை எழுத்தாளர் விருது பெற்றார். அள்ளி அள்ளி தருவேன் நாவல் ஏர்வாடி கவிஞர் ராதாகிருஷ்ணன் அறக்கட்டளை விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து