முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி கணேஷ் மறைவு: ரஜினிகாந்த், விஜய் இரங்கல்

ஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2024      சினிமா
Rajini 2024-01-21

Source: provided

சென்னை : டெல்லி கணேஷ் மறைவுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

பிரபல நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். 80 வயதான நடிகர் டெல்லி கணேஷ் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். டெல்லி கணேஷின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. 

டெல்லி கணேஷின் மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலர் நேரிலும், சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில்  இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 

என்னுடைய நண்பர் டெல்லி கணேஷ் அருமையானதொரு மனிதர். அற்புதமான நடிகர். அவருடைய மறைவு செய்தி கேட்டு நான் மனம் வருந்துகிறேன். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி என குறிப்பிட்டுள்ளார். 

டெல்லி கணேஷ் மறைவுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

மூத்த நடிகர் டெல்லி கணேஷ், உடல்நலக் குறைவால் காலமான செய்தி, வேதனை அளிக்கிறது. 40 ஆண்டுகளுக்கு மேலாக 400-க்கும் அதிகமான திரைப்படங்களில் பல தரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்ற அவரது திடீர் மறைவு, தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து