முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை: 2 வீரர்கள் காயம்

ஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2024      இந்தியா
Kashmir 2023 04 09

Source: provided

ஜம்மு : ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தின் தொலைதூர வனப்பகுதியில் தீவிரவாதிகளுடன் நேற்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர்கள் இருவர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 

ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து நடத்திய கூட்டு தேடுதல் வேட்டையின் போது கேஷ்வான் வனப்பகுதியில் முற்பகல் 11 மணிக்கு இந்த துப்பாக்கிச்சண்டை நடந்தது. கிராமப் புற காவலர்கள் இருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்த கூட்டு தேடுதல் வேட்டை குந்வாரா மற்றும் கேஷ்வான் காடுகளில் கடந்த வியாழக் கிழமை மாலை முதல் நடந்து வருகிறது.

கேஷ்வான்- கிஸ்த்வாரில் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை தொடங்கியுள்ளது. மூன்று அல்லது நான்கு தீவிரவாதிகள் காட்டுக்குள் பதுங்கியிருக்கலாம். இந்த தீவிரவாத குழுக்கள் தான் இரண்டு அப்பாவி கிராம காவலர்களைக் கொலை செய்துள்ளனர் என்று தெரிவித்தனர்.

முன்னதாக ஸ்ரீநகரில் உள்ள ஜபர்வான் காட்டில் மற்றொரு துப்பாக்கிச் சண்டை நேற்று காலையில் நடந்தது. தீவிரவாதிகளின் நடமாட்டம் குறித்த உளவுத்துறை தகவலின் அடிப்படையில் ஸ்ரீநகரின் ஜபர்வான் காட்டில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து