முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அமெரிக்கா பயணம் : 23-ம் தேதி ஐ.நா. சபையிலும் உரையாற்றுகிறார்

வெள்ளிக்கிழமை, 20 செப்டம்பர் 2024      இந்தியா
Modi 2023-08-21

Source: provided

புதுடெல்லி : அமெரிக்காவில் நடைபெறும் குவாட் உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அமெரிக்கா செல்கிறார். அதை தொடர்ந்து அதிபர் ஜோபைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் பிரதமர் மோடி, வரும் 23-ம் தேதி ஐ.நா. பொது சபையிலும் உரையாற்றுகிறார். 

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து குவாட் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடந்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு அமெரிக்காவின் டெலவர் மாகாணத்தின் வில்மிங்டன் நகரில் இன்று நடக்கிறது. 

அமெரிக்கா நடத்தும் இந்த உச்சி மாநாட்டில் ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் பிரதமர் மோடியும் பங்கேற்கிறார். இதற்காக அவர் இன்று அமெரிக்கா செல்கிறார். 

குவாட் உச்சி மாநாட்டில் ரஷ்யா - உக்ரைன் மோதல், மேற்கு ஆசியா பதற்றம் மற்றும் இந்தோ - பசிபிக் பிராந்திய நிலவரம் உள்ளிட்ட சர்வதேச சவால்கள் குறித்து தலைவர்கள் விரிவாக விவாதிக்க உள்ளனர். மாநாட்டுக்கு இடையே தலைவர்களுக்கு இடையேயான தனிப்பட்ட சந்திப்புகளும் நடைபெறுகின்றன.

அதனை  தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதிக்கின்றனர். 

குவாட் மாநாட்டை தொடர்ந்து நியூயார்க்கில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் நடைபெறும் எதிர்காலத்துக்கான உச்சிமாநாட்டில் 23-ம் தேதி பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து