முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய வரலாற்றை மாற்றியமைத்த சர்ஜான் மார்ஷலுக்கு நன்றி: முதல்வர் ஸ்டாலின் பதிவு

வெள்ளிக்கிழமை, 20 செப்டம்பர் 2024      தமிழகம்
Stalin 2021 11 29

சென்னை, நூறு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவின் வரலாற்றை மாற்றி வடிவமைத்த சர்ஜான் மார்ஷலுக்கு நன்றி தெரிவிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நேற்று தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: மிகச்சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்பு, 1924ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி சர் ஜான் மார்ஷல் சிந்துவெளி நாகரீகத்தின் கண்டுபிடிப்பை அறிவித்து, இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றை என்றென்றைக்குமாக மாற்றி வடிவமைத்தார். ஜான் மார்ஷலின் பங்களிப்பை நன்றிப் பெருக்குடன் பின்னோக்கி அவருக்கு இந்நாளில் நன்றி கூறுகிறேன்.

சிந்துவெளி நாகரீகத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் அடிப்படையில் சரியான தீர்மானத்துடன் அதனை அவர் திராவிட இனத்துடன் தொடர்புப்படுத்தினார். வரலாற்றுச் சிறப்பு மிக்க இக்கண்டுபிடிப்பின் நூற்றாண்டை ஒரு பன்னாட்டுக் கருத்தரங்குடனும், சர் ஜான் மார்ஷலின் முழு உருவச் சிலையை தமிழகத்தில் நிறுவி கொண்டாடப்படும் என்று ஏற்கெனவே அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு முதல்வர் தனது பதிவில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து