முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா முக்கிய தளபதி பலி

சனிக்கிழமை, 21 செப்டம்பர் 2024      உலகம்
Lebanon 2024-03-21

Source: provided

ஜெருசலேம் : லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் இடங்களில் இஸ்ரேல் நேற்று முன்தினம் நடத்திய துல்லிய தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி கொல்லப்பட்டார். 

காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் நோக்கில் போரிட்டு வரும் இஸ்ரேல் ராணுவத்துக்கு, அண்டை நாடான லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் பெரும் தலைவலியாக இருக்கின்றனர். ஹமாசுக்கு ஆதரவாக தினந்தோறும் இஸ்ரேலை இந்த அமைப்பினர் தாக்கி வருகின்றனர்.  

இதனால் இஸ்ரேலும் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்காக பல்வேறு வழிகளை கையாண்டு வருகிறது. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் லெபனானில் பயன்பாட்டில் உள்ள பேஜர்கள் வெடித்து பெரும் சேதங்களை ஏற்படுத்தி இருக்கிறது. 

இதன் பின்னணியில் இஸ்ரேல் இருக்கலாம் என கருதப்படுகிறது. பேஜர்களை வெடிக்கச் செய்ததற்கு பதிலடி தருவோம் என ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நசரல்லா அறிவித்திருந்தார். அதன்படி வடக்கு இஸ்ரேலில் உள்ள ராணுவ நிலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ஹிஸ்புல்லா அமைப்பினர் நேற்று முன்தினம், 140 ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அதில் பலவற்றை வானிலேயே இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் தெரிவித்தது. 

இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதே சமயம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு பகுதியில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் அதிகம் உள்ள இடங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா படையின் ராட்வான் பிரிவின் முக்கிய தளபதி இப்ராஹிம் அகில் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து