முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விருதுநகரில் ரூ.77 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2024      தமிழகம்
CM-1 2024-11-10

Source: provided

விருதுநகர் : விருதுநகரில் ரூ.77 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

விருதுநகர் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் விருதுநகர் வந்தார். பட்டாசு ஆலை மற்றும் அரசு குழந்தைகள் காப்பகத்தில் முதல்வர் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். தொடர்ந்து நேற்று காலை ரூ.77 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடத்தை முதல்வர் திறந்து வைத்தார்.

புதிய கட்டிடத்தில் உள்ள மக்கள் அரங்கம், 4-வது தளத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை ஆய்வு செய்த முதல்வர், விருதுநகர் மாவட்டத்தின் சிறப்புகள் குறித்த புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். 

இதில் வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மதுரை - திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் தற்போது உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே 7.67 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் தரைத்தளத்துடன் சேர்த்து 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் 7 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 132 இருக்கை வசதி கொண்ட மக்கள் குறைதீர் கூட்ட அரங்கம், 200 இருக்கை வசதி கொண்ட கூட்ட அரங்கம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், மாவட்ட சுகாதார அலுவலகங்கள், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை அலுவலகம், தேசிய தகவல் மையம், மாவட்ட கருவூலம், அவசர கால உதவி மையம் உட்பட 22 துறை அலுவலகங்கள், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட விரிவான வசதிகள் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து