முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி

சனிக்கிழமை, 21 செப்டம்பர் 2024      இந்தியா
Modi 2023-08-21

Source: provided

புதுடெல்லி :  குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 

3 நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்க செல்லும் பிரதமர் மோடி, அங்கு அதிபர் ஜோ பைடன் தலைமையில் நடைபெறும் குவாட் மாநாட்டில்  பங்கேற்கிறார்.  இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் மாநாடு அமெரிக்காவின் டெல்வாரே நகரில் நடக்கிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உள்பட உலகத் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

அதிபர் ஜோ பைடன் தலைமையில் நடைபெறும் 6-வது குவாட் மாநாட்டில் இந்தோ பசுபிக் பிராந்திய நாடுகளுக்கு செய்ய வேண்டிய குறித்து ஆலோசிக்கப்படும். மேலும், அமெரிக்கா உடனான இருதரப்பு பேச்சுவார்த்தையும் நடைபெறவுள்ளது.

தொடர்ந்து இன்று 22-ம் தேதி நியூயார்க் செல்லும் பிரதமர் மோடி, அங்கு யூனியன்டேலில் உள்ள நாசாவ் கொலிசியம் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றுகிறார். 15 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொள்ள கூடிய இந்த அரங்கில் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். 

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களை சேர்ந்த தலைமை செயல் அதிகாரிகளுடனான சந்திப்பில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். தனது சுற்றுப்பயணத்தின் கடைசி நாளான 23-ம் தேதி ஐக்கிய நாடுகள் அவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி எதிர்காலத்திற்கான மாநாடு என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். அன்றைய தினம் பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் மோடி சந்திக்க உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து