முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு கிராம் தங்கம் விலை ரூ.7 ஆயிரத்தை நெருங்கியது

திங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2024      தமிழகம்
gold 2023 01 26

Source: provided

சென்னை : தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,980-க்கு விற்பனையானது. 

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது. கடந்த ஜூலை மாதம் பட்ஜெட்டில் தங்கத்தின் இறக்குமதி மீதான வரி குறைக்கப்பட்டதால் பவுன் ரூ.2 ஆயிரத்து 200 வரை குறைந்தது. இது இல்லத்தரசிகள் மற்றும் நகைப் பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.பின்னர், ஆகஸ்டு மாத முதல் வாரத்தில் இருந்தே தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது.

நேற்று முன்தினம் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்து 680-க்கு விற்பனையானது. இந்நிலையில் நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.55,840-க்கு விற்பனையானது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,980-க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் நேற்று எந்த மாற்றமும் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.98-க்கு விற்பனையானது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து