முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-வங்கதேச 2-வது டெஸ்ட்: இன்று 3-வது நாள் ஆட்டமும் மழையால் ரத்தாக வாய்ப்பு..?

சனிக்கிழமை, 28 செப்டம்பர் 2024      விளையாட்டு
India-Bangladesh 2024-03-27

Source: provided

கான்பூர் : இந்தியா-வங்கதேச 2-வது டெஸ்ட் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடந்து வருகிறது. இதற்கிடையே நேற்று 2-வது நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 3-வது நாள் ஆட்டமும் மழையால் ரத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று கான்பூரில் 60 சதவீதம் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளதை அடுத்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.

சுற்றுப்பயணம்... 

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் சென்னையில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.இந்த நிலையில் இந்தியா- வங்காளதேசம் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

பந்துவீச்சு தேர்வு... 

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்கிறது. அந்த அணி 35 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் அடித்திருந்தபோது போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு மழை பெய்ததன் காரணமாக முதல் நாள் ஆட்டம் அதோடு ரத்து செய்யப்பட்டது.முஷ்பிகுர் ரஹிம் 6 ரன்களுடனும், மொமினுல் ஹக் 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

முழுமையாக ரத்து... 

இதனையடுத்து நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற இருந்தது . இந்த நிலையில் நேற்று காலை முதல் கான்பூரில் மீண்டும் மழை பெய்து வருவதால் 2வது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் 3-வது நாளான இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கான்பூரில் இன்று 60 சதவீதம் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதனால் இப்போட்டி திட்டமிட்டபடி நடைபெறுவது கேள்விக்குறியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து