முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெற்றியை ரோகித் எடுத்து சென்று விட்டார்: நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர்

திங்கட்கிழமை, 10 மார்ச் 2025      விளையாட்டு
New-Zealand 2023-12-10

Source: provided

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு எதிராக ஏற்பட்ட தோல்வி குறித்து நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பேசியுள்ளார்.

இந்திய அணி சாம்பியன்...

ஐ.சி.சி.  சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நேற்று முன்தினத்துடன் (மார்ச் 9) நிறைவடைந்தது. துபாயில்  நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 3-வது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா சிறப்பான தொடத்தைத் தந்தார். அதிரடியாக விளையாடிய அவர் 83 பந்துகளில் 76 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.

மிட்செல் சாண்ட்னர்... 

இறுதிப்போட்டியில் இந்திய அணியிடம் தோல்வியடைந்த நிலையில், ரோகித் சர்மா தங்களிடமிருந்து போட்டியை இந்திய அணிக்கு சாதகமாக எடுத்துச் சென்றுவிட்டதாக நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

மிகவும் துல்லியமாக... 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளையாடிய விதம் எங்களிடமிருந்து போட்டியை இந்திய அணிக்கு சாதகமாக எடுத்துச் சென்றுவிட்டதாக நினைக்கிறேன். துபாயில் ஆடுகளங்களின் தன்மையை இந்திய அணி மிகவும் துல்லியமாக தெரிந்து வைத்திருந்து நன்றாக விளையாடினார்கள். தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டியில் தோல்வியடைவது கசப்பான ஒன்றாக இருக்கிறது. ஆனால், இறுதிப்போட்டியில் மிகவும் வலிமையான இந்திய அணிக்கு எதிராக விளையாடி தோல்வியடைந்துள்ளோம்.

பெருமையாக இருக்கிறது...

இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு சவாலளிக்கும் விதமாக செயல்பட்டோம். ஆனால், சில சிறிய தவறுகளால் சரியான முடிவுகளைப் பெற முடியவில்லை. இருப்பினும், சிறப்பாக செயல்பட்ட நியூசிலாந்து அணியை நினைத்து பெருமையாக இருக்கிறது. இந்த தொடர் முழுவதும் நாங்கள் சிறப்பாக விளையாடினோம். துபாயில்  ஆடுகளங்களின் தன்மைக்கு ஏற்றவாறு விளையாடுவதற்கு நாங்கள் தயார் ஆனோம். ஆனால், துபாயில்  ஆடுகளங்கள் மற்றும் லாகூர் ஆடுகளங்களுக்கு இடையே நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து