முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

சனிக்கிழமை, 5 அக்டோபர் 2024      இந்தியா
Kashmir 2023 04 09

Source: provided

ஜம்மு : ஜம்மு காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகளை ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.

இது தொடர்பாக ஸ்ரீநகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சினார் கார்ப்ஸ் ராணுவப் பிரிவு வெளியிட்டுள்ள டுவிட்டர் தள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, 

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் குகல்தார் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயல்வதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து இந்திய ராணுவமும், ஜம்மு காஷ்மீர் காவல்துறையும் இணைந்து நடவடிக்கையைத் தொடங்கின.

சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டைக் கண்டறிந்த பாதுகாப்புப் படையினர், அவர்களுக்கு சவால் விடுத்தனர். இதையடுத்து, பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். எச்சரிக்கை அடைந்த பாதுகாப்புப் படையினர், திறம்பட துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

இந்த தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து அங்கு நடத்தப்பட்ட சோதனையில், பயங்கரவாதிகளின் ஆயுதக் கிடங்கு கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது என்று அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து