முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர்-அரியானா தேர்தல்: கருத்துக்கணிப்பு முடிவுகள்

சனிக்கிழமை, 5 அக்டோபர் 2024      இந்தியா
Vote 2024-01-05

Source: provided

அரியானா : அரியானா, காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. அரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 59 தொகுதிகளை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரியானாவில் ஆளும் பாஜகவுக்கு 21 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என கருத்துக்கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியில் மூன்றாவது முறை ஆட்சியைக் கைப்பற்றியது போல, அரியானா மாநிலத்தில் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியில் இருந்த பா.ஜ.க மூன்றாவது முறை ஆட்சியைக் கைப்பற்ற கடுமையாக போராடியது. அதேநேரம் கடந்த இரண்டு முறை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக தொடர்ந்த காங்கிரஸ், இந்த முறை இன்டியா கூட்டணியுடன் வலுவாக உள்ளது. அதனால், அரியானா தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கூட்டணிக்கும் மிக முக்கியமாக கருதப்படுகிறது. அரியானவை பொறுத்தவரை, பிற்படுத்தப்பட்டோர், விவசாயிகளின் வாக்கு சதவிகிதம் அதிகம்.

இதை அறுவடை செய்யும் நோக்கில் பல திட்டங்களை மத்திய பா.ஜ.க அரசு அறிவித்தது. ஆனால், தேர்தல் தொடங்குவதற்கு முன்பே, விவசாயிகள் போராட்டம், அக்னிபாத் திட்ட எதிர்ப்பு, விவசாயிகள் போராட்டம் குறித்து பா.ஜ.க எம்.பி கங்கனா ரானாவத்தின் சர்ச்சை கருத்துக்கள், மல்யுத்த வீரர்களின் பரவலான போராட்டம் எனப் பல்வேறு சிக்கல்களை எதிர்க்கொண்டது. அதனால், இந்த தேர்தலில் பல கட்சிகளும், கூட்டணிகளும் தங்கள் இருப்பை தக்கவைத்துக் கொள்ள கடுமையான போராடின.

அதற்கு தொடக்கப்புள்ளியாக, தேர்தலுக்கு முன்பே, பா.ஜ.க கூட்டணியிலிருந்து வெளியேறியது   முக்கியமாக, இந்த தேர்தல் முடிவு, இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவிருக்கும், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களின் மனநிலைக்கு ஒரு முன்னோடியாகவே இருக்கும் என அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.  90 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு நேற்று 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில், அரியானா தேர்தலின் தேர்தல் முன்முடி கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. 

பிபுள்ஸ் பல்ஸ்

மொத்த இடங்கள் - 90

காங்கிரஸ் - 55

பாஜக - 26

ஜனநாயக் ஜனதா கட்சி - 0-1

இந்திய தேசிய லோக் தளம் - 2-3.

மற்றவை - 3-5

டாய்நிக் பாஸ்கர்

காங்கிரஸ் - 44 -44

பாஜக - 19 - 29

ஜனநாயக் ஜனதா கட்சி - 0 -1

இந்திய தேசிய லோக் தளம் - 1 -5

மற்றவை - 4 - 9

துருவ் ரிசர்ச்

காங்கிரஸ் - 56 -64

பாஜக - 27 - 32

மற்றவை - 5 - 6

ரிபப்ளிக் மேட்ரிஸ் 

காங்கிரஸ் - 55 -62.

பாஜக - 18 - 24.

ஜனநாயக் ஜனதா கட்சி - 0 -3.

இந்திய தேசிய லோக் தளம் - 3 - 6

மற்றவை - 2 - 5.

ஜம்மு காஷ்மீர்

இன்டியா டுடே- சி வோட்டர்

காங்கிரஸ் கூட்டணி - 40 - 48.

பாஜக 27 - 32.

மக்கள் ஜனநாயகக் கட்சி 6 - 12.

இதர கட்சிகள் - 6 - 11.

போல் ஆப் போல்:

தேசிய மாநாட்டுக் கட்சி - 22 -25

மக்கள் ஜனநாயகக் கட்சி 18 - 20.

பாஜக 24 - 29.

காங்கிரஸ் 13 இடங்கள்

அப்னி கட்சி 0 முதல் 2.

இதர கட்சிகள் 2 - 3. 

ஜே.ஜே.பி. 0 முதல் 3. 

லோக்தள் கூட்டணி 0 முதல் 6.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து