முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் நுழைவு தேர்வை ஆன்லைனில் நடத்தலாம் : மத்திய அரசுக்கு சீரமைப்பு குழு பரிந்துரை

புதன்கிழமை, 30 அக்டோபர் 2024      இந்தியா
Neet 2023-04-13

Source: provided

புதுடெல்லி : நீட் நுழைவுத் தேர்வை ஆன்லைனில் நடத்தலாம் என்று மத்திய அரசுக்கு நீட் தேர்வு சீரமைப்புக்குழு பரிந்துரைத்துள்ளது.

இளநிலை மருத்துவப்படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில் ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு, பயிற்சி மையங்களில் கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியானது என பல சர்ச்சைகள் எழுந்தன. மாணவர்கள் தரப்பிலும், பெற்றோர்கள் தரப்பிலும் இதுபோன்ற நிகழ்வுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந் நிலையில் நீட் முறைகேடு என்று தொடரும் குற்றச்சாட்டுகள், தேர்வின் போது நடந்த மோசடி ஆகியவற்றை தடுக்கும் வகையில் இஸ்ரோ முன்னாள் தலைவர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. 

நீட் தேர்வின் சீர்திருத்தங்கள் குறித்த பரிந்துரைகளை அளிக்க பணிக்கப்பட்டது. இந்த குழு நீண்ட ஆய்வு நடத்தி தனது பரிந்துரைகளை மத்திய கல்வி அமைச்சகத்திடம் அறிக்கையாக சமர்ப்பித்துள்ளது. அந்த பரிந்துரைகளில் கூறப்பட்டுள்ள விவரங்கள் வருமாறு;

நீட் தேர்வு மையங்களை அவுட்சோர்சிங் என்ற முறையில் வழங்காமல் அதன் சொந்த தேர்வு மையங்கள் எண்ணிக்கையை அதிகரித்து நடத்தலாம். ஆன்லைன் முறை சாத்தியம் இல்லை எனும் போது, வினாத்தாள்களை டிஜிட்டல் முறையில் தேர்வர்களுக்கு அனுப்பலாம். 

அவர்கள் கேள்விகளுக்கான பதில்களை ஓ.எம்.ஆர். விடைத்தாளில் குறிப்பிடலாம். இதன் மூலம் விடைத்தாள்கள் பலரின் கைகளுக்கு செல்வது தடுக்கப்படும் அல்லது கணிசமாக குறைக்கப்படும். எத்தனை முறை தேர்வில் பங்கேற்பது என்ற கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம். 

ஜே.இ.இ., மெயின் மற்றும் அட்வான்ஸ்டு உள்ளிட்ட நுழைவுத் தேர்வை போலவே அதிகம் பேர் நீட் தேர்வை எழுதுவதால் பல நிலைகளில் இந்த தேர்வை நடத்தலாம். இவ்வாறு கே. ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவில் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து