முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ம.க. இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமனத்தில் மாற்றமா? ராமதாஸ் பதில்

வியாழக்கிழமை, 2 ஜனவரி 2025      தமிழகம்
Ramadoss 2023-07-28

சென்னை, பா.ம.க. இளைஞரணி தலைவர் முகுந்தன் தான் என்று ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தைலாபுரத்தில் தனது தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கட்சியின் தலைவர், நிறுவனர் போன்ற உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்கள் பத்திரிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு கோபப்படாமல் நடந்து கொள்ள வேண்டும். சாந்தமாக பதில் சொல்ல வேண்டும். தி.மு.க.வும், பா.ம.க.வும் கூட்டணியில் இருந்தபோது கலைஞரிடம் பத்திரிகையாளர்கள் ஒரு கேள்வி கேட்டனர்.

'கூட்டணியில் இருந்து கொண்டே டாக்டர் ராமதாஸ் உங்களை தினமும் விமர்சிக்கிறாரே?' என்ற கேள்விக்கு கலைஞர், 'தைலாபுரத்திலிருந்து எனக்கு தினமும் தைலம் வருகிறது' என்று பதில் கூறினார். இவ்வாறு நளினமாகவும் நாகரிகமாகவும் பதில் அளிப்பதற்கு கலைஞரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்" என்று ராமதாஸ் கூறினார்.

இதனைத்தொடர்ந்து அன்புமணியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "அன்புமணி உடன் எனக்கு கருத்து வேறுபாடு இருந்தது. அதற்குப் பிறகு அவர் இங்கே வந்து பேசினார். எல்லாம் சரியாகிவிட்டது" என்று கூறினார். பின்னர் பா.ம.க.வின் இளைஞர் அணி தலைவர் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "பா.ம.க. மாநில இளைஞர் அணி தலைவர் பொறுப்பில் முகுந்தன் நீடிக்கிறாரா என்ற பேச்சுக்கே இடமில்லை. அதில் எந்தவித மாற்றமும் இல்லை. பொதுக்குழு முடிந்த மறுநாளே அவருக்கு நியமன கடிதமும் டைப் அடித்துக் கொடுத்து விட்டேன். முகுந்தனை இளைஞர் அணித் தலைவராக நியமித்ததில் எவ்வித மாற்றமுமில்லை" என்று ராமதாஸ் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து