முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றால அருவிகளில் குளிக்க தடை

வெள்ளிக்கிழமை, 1 நவம்பர் 2024      தமிழகம்
Kurtalam 2024 08 18

Source: provided

தென்காசி : குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழை காரணமாக தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக நேற்று காலை ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து 5 மணிநேரம் களித்து அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில், தற்போது மாலை நேரத்தில் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை பெய்யத்தொடங்கியுள்ளது. 

மழை பெய்து வருவதால் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தீபாவளி விடுமுறையை சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்துள்ள நிலையில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் பலரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து