முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் அரசு அலுவலங்கள், பள்ளி, கல்லூரிகள் இன்று இயங்கும்

வெள்ளிக்கிழமை, 8 நவம்பர் 2024      தமிழகம்
School 2023 04 07

சென்னை, தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் இன்று செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் முதல் வாரத்தில் வருவது வழக்கம். ஆனால் இந்த முறை முன்கூட்டியே அதாவது அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டதை அடுத்து அன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

எனவே இடையில் ஒரு நாள் வெள்ளிக்கிழமை மட்டும் விடுமுறை கிடைத்தால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையை சேர்ந்து மொத்தமாக 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும். இது தொடர்பாக அரசு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. இதனை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு தீபாவளி மறுநாள் அதாவது நவம்பர் 1ம் தேதி பொது விடுமுறை தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இதனிடையே, இந்த ஆண்டு தீபாவளியை அக்டோபர் 31ம் தேதியன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கடந்த 1ம் தேதி ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்தும் அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் இன்று வேலை நாளாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்தநிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் இன்று (09-11-2024) செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு மறு நாள் விடுமுறை விடப்பட்ட நிலையில் அதனை ஈடுசெய்ய இன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து, தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் மாநகராட்சி பள்ளிகள் இன்று (9ம் தேதி) முழு நேரம் செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக மாவட்ட கல்வித்துறை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் இன்று (9- ம்தேதி) பள்ளிகள் முழுநேரம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து