முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகா கும்பமேளாவால் உத்தரப்பிரதேச அரசுக்கு ரூ.2 லட்சம் கோடி வருவாய்

திங்கட்கிழமை, 13 ஜனவரி 2025      இந்தியா
kumbelaa

Source: provided

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நேற்று தொடங்கியிருக்கும் மகா கும்பமேளாவால் உ.பி.க்கு ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கங்கை, யமுனை, சரஸ்வதி ஆறுகள் சேரும் சங்கமம் இடத்தில் நேற்று காலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகிறார்கள்.  வரலாற்றுச் சிறப்பு மிக்க திருவிழாக்களில் உலகமே பேசும் மகா கும்ப மேளாவுக்கான முன்னேற்பாடுகளை உத்தரப்பிரதேச அரசு வெகு விமரிசையாக செய்திருக்கும் நிலையில், இதன் மூலம் ரூ.2 லட்சம் கோடியை வருவாயாக ஈட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ரஷியா மட்டுமல்லாமல் ஏராளமான வெளிநாடுகளிலிருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்தியா வந்துகொண்டிருக்கும் நிலையில், இந்த மகா கும்ப மேளாவில் கிட்டத்தட்ட 40 கோடி பேர் பிரயாக்ராஜ் வருவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.  அதாவது, இந்த 40 கோடி பேரும், உத்தரப்பிரதேசத்துக்குள் வந்து தங்கிச் செல்லும் போது, குறைந்தபட்சம் தலா ரூ.5,000 செலவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு இருந்தால் உத்தரப்பிரதேச அரசின் வருவாய் ரூ.2 லட்சம் கோடியாக இருக்கும். ஒருவேளை, ஒரு பக்தர் ரூ.10000 செலவிட்டால் மொத்த வருவாய் ரூ.4 லட்சம் கோடியாக இது உயரும் என்று கூறப்படுகிறது.

மகா கும்ப மேளா திருவிழாவின்போது, சங்கமம் பகுதியில் மக்கள் புனித நீராடுவார்கள். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா கும்ப மேளா நடைபெறுகிறது. 4000 ஹெக்டேர் பரப்பளவில் நடைபெறும் இந்த திருவிழா பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்த மகா கும்ப மேளா நிகழ்ச்சி ஏற்பாட்டுக்காக ரூ.7000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, 45 நாள்களும் சிறப்பு ஏற்பாடுகள், ஏழு அடுக்குப் பாதுகாப்புப் பணிகள் செய்யப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து