முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பால் தாக்கரேவை அவமதித்தவர்களுடன் உத்தவ் தாக்கரே கூட்டணி: அமித்ஷா தாக்கு

ஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2024      இந்தியா
amit-shah 1

Source: provided

மும்பை : பால்தாக்கரேவை அவமதித்தவர்களுடன் உத்தவ் தாக்கரே கூட்டணி வைத்திருக்கிறார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 

மராட்டிய மாநிலத்தில்  பா.ஜ.க.வின்  தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:-

காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பால் தாக்கரேவையும் சாவர்க்கரையும் அவமதித்தனர். அந்த கட்சியுடன் உத்தவ் தாக்கரே கூட்டணி வைத்து பக்கபலமாக நிற்கிறார். உத்தவ் தாக்கரேவிடம்  நான் கேட்க விரும்புவது என்னவென்றால், 'வீர சாவர்க்கரைப் பற்றி இரண்டு நல்ல வார்த்தைகளை பேசும்படி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் உங்களால் கேட்க முடியுமா?.

பால் தாக்கரேவை கவுரவிக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர் யாராவது சில வார்த்தைகள் பேசுவார்களா? இது போன்ற முரண்பாடுகளுக்கு மத்தியில், கூட்டணி ஆட்சி அமைக்கும் கனவோடு தேர்தலில் களமிறங்கியவர்களை மராட்டிய மக்கள் அறிந்து கொண்டால் நல்லது. 

உலமாக்களின் அமைப்பு சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு கோரியுள்ளது. அதை மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே ஆமோதிக்கிறார். ஆனால், மராட்டிய மக்கள் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓ.பி.சி.க்களுக்கான இடஒதுக்கீட்டின் உரிமையை முஸ்லிம்களுக்கு வழங்குவதற்கு ஆதரவாக இருக்கிறார்களா?.

நமது அரசியலமைப்புச் சட்டம் மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கவில்லை. இருப்பினும், காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அவ்வாறு இடஒதுக்கீடு வழங்குவதாக வாக்குறுதி அளித்தது. மக்கள் இந்த பிரச்சினையை அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து