முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விருதுநகர் மாவட்டத்திற்கு முதல்வர் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்புகள்

ஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2024      தமிழகம்
CM-2 2024-11-10

Source: provided

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், பட்டாம்புதூரில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று உரையாற்றிய முதல்வர்  மு.க.ஸ்டாலின், விருதுநகர் மாவட்டத்திற்கான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

விருதுநகர் மாவட்டத்திற்கு,  சில திட்டங்கள் தேவை என்று    ஆய்வு கூட்டத்தில் அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று, இந்த நிகழ்ச்சியின் வாயிலாக அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.

தீப்பெட்டி, பட்டாசு, ஜவுளி உற்பத்தி மற்றும் அச்சுத் தொழில் போன்ற பல்வேறு தொழில்துறைகளில் விருதுநகர் மாவட்டம் முன்னணியில் இருந்தாலும், விவசாயத்தைப் பொறுத்தவரை, மழையையும், கண்மாய்கள் போன்ற நீர்நிலைகளையும் நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலைதான் நிலவுகிறது. 

விருதுநகர் மாவட்டத்தில், எதிர்கால தொழில் வளர்ச்சிக்கு வித்திடுகின்ற வகையில்,  இந்த மாவட்டத்தில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க அரசு முடிவு செய்தது.  அருப்புக்கோட்டை அருகே சுமார் 400 ஏக்கர் பரப்பளவில், 350 கோடி ரூபாய் செலவில், இந்த புதிய சிப்காட் தொழில்வளாகம் அமைக்கப்படும்.  இதனால், இந்தப் பகுதியில் உள்ள சுமார் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று  தெரிவித்துக் கொள்கிறேன்.

சிவகாசி மாநகராட்சியில், 15 கோடி ரூபாய் செலவில், நவீன வசதிகளுடன் கூடிய மாநாட்டு அரங்கம் அமைக்கப்படும். விருதுநகர் நகராட்சியில், 24 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில்  சாலை மற்றும் மழைநீர் வடிகால் வசதிகள் மேம்படுத்தப்படும். சாத்தூர் நகராட்சியில், 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில்,  பூங்கா மற்றும் சிறு பாலம் அமைக்கப்படும். 

ராஜபாளையம் நகராட்சியில், 13 கோடி ரூபாய் செலவில், மழைநீர் வடிகால் வசதிகள் அமைக்கப்படுவதுடன்,  கோடை நீர்த்தேக்கம் 5 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். அருப்புக்கோட்டை நகராட்சியில், 3 கோடி ரூபாய் செலவில் மழைநீர் வடிகால் வசதிகள் அமைக்கப்படுவதுடன், ஒன்றரை கோடி ரூபாய் செலவில் பூங்காவும் அமைக்கப்படும்.

விருதுநகர் நகராட்சி எல்லைக்குள் வரக்கூடிய நெடுஞ்சாலைகள்  25 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், அருப்புக்கோட்டை நகராட்சி எல்லைக்குள் இருக்கக்கூடிய நெடுஞ்சாலைகள்  10 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், காரியாபட்டி நகரத்தின் எல்லைக்குள் இருக்கக் கூடிய நெடுஞ்சாலைகள் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மேம்படுத்தப்படும்.  

திருவில்லிபுத்தூரில், இருக்கின்ற ஆண்டாள் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் பயன்பாட்டிற்காக, கழிவறைகள் மற்றும் வாகன நிறுத்துமிடம்  2 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும். சுற்றுலா துறைவத்திராயிருப்புக்கு அருகே பிளவக்கல் அணைப் பகுதியில், 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பூங்கா மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள சுற்றுலாத்தலமான  சாஸ்தா கோவில் அருவி பகுதியில், ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு முதல்வர்  மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து