முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தே.மு.தி.க.வில் விஜயபிரபாகரனுக்கு பொறுப்பு: பிரேமலதா விஜயகாந்த்

ஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2024      தமிழகம்
Pramalatha

Source: provided

சென்னை : விஜயபிரபாகரனுக்கு கட்சியில் பதவி வழங்குவது  தொடர்பாக செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று அக்கட்சியின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். 

தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா தலைமையில் நடைபெற்றது.  இதில் முக்கிய 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  அதனை தொடர்ந்து  செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது,  

விஜயபிரபாகரனுக்கு கட்சியில் பதவி வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும். விஜய பிரபாகரன் மட்டும் இல்லாமல் பல்வேறு நபர்களுக்கு செயற்குழு கூட்டத்தில் பொறுப்பு வழங்கப்பட உள்ளது. 

2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை, முன்னிட்டு மாபெரும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம். மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் தேர்தல்களுக்கான பணிகளை இப்போதே துவங்கி விட்டோம். 234 தொகுதிகளுக்கும் சட்டமன்ற பொறுப்பாளர்களை நியமித்து இன்று(நேற்று) முதல் பணிகளை துவங்கி இருக்கிறோம். 

அ.தி.மு.க.,வுடன்  நாங்கள் நட்புறவுடன் தொடர்கிறோம். அ.தி.மு.க.,வுடன் கூட்டணி இன்று வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. மாநாடு நடத்திய பிறகு விஜய் பொது வெளியில் யாரையும் சந்திக்கவில்லை.  விஜய்யை சந்திக்க வைத்து செய்தியாளர்களான  நீங்கள்தான் கேள்வி கேட்க வேண்டும். 

விஜய்யின் கட்சி கொள்கை, கூட்டணி வியூகங்கள் பற்றி அவரிடம்தான் கேட்க வேண்டும்.  234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். 2026 தேர்தலில் 234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.

வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வாய் சவடால் விட்டு கொண்டு, அதிகாரம் பவரை வைத்து கொண்டு மாயை உருவாக்கி கொண்டு இருக்கிறார்கள். அவங்க கூட்டணியில் பல குளறுபடிகள். 2026-ம் ஆண்டு கூட்டணி தொடருமா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து