முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் இன்று அ.தி.மு.க. கள ஆய்வுக்குழு ஆலோசனை

ஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2024      தமிழகம்
EPS 2023-10-17

Source: provided

சென்னை : சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் அமைக்கப்பட்டுள்ள 10 பேர் அடங்கிய கள ஆய்வு குழுவின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. 

கட்சிப் பணிகளை விரைவு படுத்துவதற்காக அ.தி.மு.க.வில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், .தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார் சி.வி.சண்முகம் எம்.பி., செம்மலை, பா.வளர்மதி, வரகூர் அருணாசலம் ஆகிய 10 பேர் கொண்ட கள ஆய்வு குழு ஒன்றை அமைத்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2 தினங்களுக்கு முன் அறிவித்தார்.

மேற்கண்ட குழுவினர், அ.தி.மு.க. அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று கள ஆய்வு செய்து, அதன் விபரங்களை வருகிற டிசம்பர் 7-ம் தேதிக்குள் அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், இன்று திங்கட்கிழமை   காலை 10 மணிக்கு கள ஆய்வுக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த ஆலோசனைக்கு பிறகு மாவட்ட வாரியாக, கிளை, வார்டு, வட்டக்கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் செயல்பாடுகளை இந்த குழுநேரடியாக கள ஆய்வு செய்ய உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து