முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண் கல்வியை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2024      தமிழகம்
CM-2 2024-11-02

Source: provided

சென்னை : பெண் கல்வியை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்

கடந்த 2021-ம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்து படிக்க உதவி கேட்டு கடிதம் எழுதிய மாணவிக்கு முதல்வர்  மு.க.ஸ்டாலின் உதவினார். கல்லூரிப் படிப்பை நிறைவு செய்த அவர் தற்போது வேலைக்குச் செல்கிறார். இந்த நிலையில் அவரை நேரில் அழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் முதல்வர்  மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், 

படிக்க உதவிட வேண்டும் என 2021-ம் ஆண்டு மாணவி ஷோபனா எனக்குக் கடிதம் எழுதினார். அவர் கல்லூரியில் சேரவும் படிக்கவும் உதவினேன். மூன்றாண்டுகளில் தனது கல்லூரிப் படிப்பை நிறைவு செய்து, வேலைக்குச் செல்லும் அவரை அழைத்து வாழ்த்தினேன்.

ஒரு பெண் கற்கும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாய் விளங்கும் என்பதையுணர்ந்து, பெண் கல்வியை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து