முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குளிக்கச்சென்ற போது விபரீதம்: காவிரியில் மூழ்கி உயிரிழந்த மாணவர்கள் உடல்கள் மீட்பு

ஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2024      தமிழகம்
Boot 2024 07 22

Source: provided

திருச்சி : காவிரி ஆற்றில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி பலியான 3 மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டம், பிலிக்கல்பாளையம் அருகே உள்ள நகப்பாளையம் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி பலியான 3 பொறியியல் மாணவர்களின் உடல்களை நாமக்கல் தீயணைப்பு துறையினர் மீட்டு ஜேடர்பாளையம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட மூன்று பேர்களின் உடல்களும் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது.

பிலிக்கல்பாளையம் அருகே உள்ள நகப்பாளையம் பகுதியை சேர்ந்த சின்ராஜ். இவரது மகன் வினித் விமல்ராஜ் (21). இவர் குமாராபாளையத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இறுதியாண்டு பொறியியல் பயின்று வந்தார். அதே கல்லூரியில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி பகுதியை சேர்ந்த தேவராஜ் என்பவரது மகன் நந்தகுமார் (21) மற்றும் ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை ஷேக் பைசுல் ரகுமான் (21) ஆகியோர் பயின்று வந்தனர். இவர்கள் 3 பேரும் நண்பர்கள். நந்தகுமார், ரகுமான் ஆகியோர் கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வந்தனர்.

இவர்கள் சனிக்கிழமை வினித் விமல்ராஜ் வீட்டுக்கு வந்துள்ளனர். பின்னர் அவர்கள் அங்கு சாப்பிட்டுவிட்டு வினித் விமல்ராஜ் தனது பெற்றோரிடம் நானும், தனது நண்பர்களும் நகப்பாளையம் காவிரி ஆற்றில் குளித்துவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளனர்.‌ காவிரி ஆற்றுக்கு குளிப்பதற்காக சென்றவர்கள் நீண்ட நேர மாகியும் வராததால் வினித் விமல்ராஜ் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று பார்த்தனர். அப்போது அவர்கள் 3 பேரின் காலணிகள், ஆடைகள் மற்றும் செல்லிடைபேசிகள் காவிரி ஆற்றின் கரையில் இருந்தன. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஜேடர்பாளையம் காவல் துறையினருக்கு தக‌வல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு வந்த தீயணைப்பு துறையினர் காவல் துறை உதவியுடன் காவிரி ஆற்றில் காணாமல் போன மூன்று கல்லூரி மாணவர்களையும்‌ இரவு முழுவதும் தேடிவந்தனர். ஆனால், அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை நாமக்கல் தீயணைப்புத் துறையினர் மூலம் காவிரி ஆற்றில் காணாமல் போன மாணவர்களை‌ தேடினர். அப்போது சிறிது தூரத்தில் உள்ள ஒரு பாறை இடுக்கில் வினித் விமல் ராஜ் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். அதையடுத்து மற்ற இரண்டு மாணவர்களின்‌ உடல்களையும் மீட்டு ஜேடர்பாளையம் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட உடல்களை பார்த்து மாணவர்களின் பெற்றோர் கதறி அழுதது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து