முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: பந்துவீச்சாளர்களில் ஜஸ்ப்ரிட் பும்ரா,ஆல்ரவுண்டர்களில் ஜடேஜா முதலிடம்

புதன்கிழமை, 11 டிசம்பர் 2024      விளையாட்டு
11-Ram-50

Source: provided

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஆண்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை நேற்று வெளியான நிலையில், பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேபோல் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்திய வீரர் ஜஸ்ப்ரிட் பும்ராவும், ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவும் முதலிடம் பெற்றுள்ளனர்.

ஆண்களுக்கான... 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஆண்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து இளம் வீரர் ஹாரி புரூக் (898 புள்ளி) முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார். இங்கிலாந்தின் ஜோ ரூட் (897 புள்ளி) ஒரு இடம் சரிந்து 2வது இடத்திற்கு வந்துள்ளார்.

ஜெய்வால் 4-வது...

இந்த பட்டியலில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் (812 புள்ளி) 3வது இடத்திலும், இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (811 புள்ளி) 4வது இடத்திலும் உள்ளனர். ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் (781 புள்ளி) 6 இடங்கள் உயர்ந்து 5வது இடத்திற்கு வந்துள்ளார். பேட்ஸ்மேன்கள் பட்டியலில் ரிஷப் பண்ட் (724 புள்ளி) 9வது இடத்திலும், சுப்மன் கில் (672 புள்ளி) 17வது இடத்திலும், விராட் கோலி (661 புள்ளி) 20வது இடத்திலும் உள்ளனர்.

ஜஸ்ப்ரித் பும்ரா... 

டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் ஜஸ்ப்ரித் பும்ரா (890 புள்ளி) முதல் இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் ககிசோ ரபாடா (856 புள்ளி) 2வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட் (851 புள்ளி) 3வது இடத்திலும் உள்ளனர். டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா (415 புள்ளி) முதல் இடத்தில் உள்ளார். வங்காளதேசத்தின் மெஹதி ஹசன் மிராஸ் (284 புள்ளி) 2 இடங்கள் உயர்ந்து 2வது இடத்திற்கு வந்துள்ளார். இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் (283 புள்ளி) 3வது இடத்தில் உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து